ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் விடுதலைப்புலிகள் ஆதரவாளரா? சு.சுவாமி திடுக்கிடும் தகவல்
முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராகுல்காந்தி விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அதே ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாஜக வேட்பாளர் மனோகரை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய சுப்பிரமணியன்சுவாமி, “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விடுதலை புலிகள் ஆதரவாளர் என காங்கிரஸ்காரர்களே கூறி வருகின்றனர். அப்படி இருக்கையில், விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி உயிர்நீத்த இந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் விடுதலை புலிகளின் ஆதரவாளருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1990-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்ற போது கருணாநிதி விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது’ என்று கூறினார்.
மேலும் ஜெயலலிதா அரசியலுக்கு வரும் போது ஒரு ரூபாய் கூட சொத்து இல்லை, ஆனால் தற்போது அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கு ரூ120 கோடி சொத்து உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறப்போகிறார். ஜெயலலிதா முதல்வராக போவது இல்லை, சசிகலா தான் முதல்வராக போகிறார். எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது வீண்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊழல். எனவே ஊழலற்ற ஆட்சிஅமைய பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மனோகரனுக்கு வாங்களியுங்கள் என்றார்..
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.