சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டு விசாரணை கடந்த 40 நாட்களாக பெங்களூர் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மேல் மறுமுறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆரம்பமான இந்த விசாரணையில் தற்போது தீர்ப்பு வெளிவரும் நாளையும் விரைவில் நீதிபதி அறிவிக்க இருக்கின்றார்.
இந்நிலையில் சுப்பிரமணியசாமி சார்பில் அவரது எழுத்துப் பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய அவர் கேட்ட அவகாசத்தை கொடுக்க மறுத்த நீதிபதி குமாரசாமி இன்று அவரது வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் சுப்பிர மணியசாமி இன்று காலை பெங்களூர் வந்தார். கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்பு ஆஜரான அவர் தனது எழுத்துப்பூர்வ வாதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
வக்கீல்கள் வாதம் முடிந்து எழுத்துப்பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.