உயர்கல்விக்கு கைகொடுக்கும் உதவித்தொகைகள்

download

+2 முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் பற்றி கடந்த இதழ்களில் பார்த்தோம். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளும் கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. அப்படியான சில உதவித்தொகைகள் பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு

சென்னை, சேத்துப்பட்டில் செயல்படும் தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 150 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகிறது. கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:  044-28361825

ஆனந்தம் யூத் ஃபெடரேஷன்

சென்னை, கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஆனந்தம் யூத் ஃபெடரேஷன், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் உள்ள, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: 044-45588555, 9551939551

பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்

உலக அளவில் செயல்பட்டு வரும் ‘பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்’ என்ற  தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பார்வைத் திறன் அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை அறிவியல், பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.brightfuture fortheblind.org

பிரீகத் பாரதீய சமாஜ்

மும்பையைச் சேர்ந்த இந்த அமைப்பு +2 முடித்து முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்குகிறது. +2வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://swascholarships.blogspot.in/2012/07/shri-brihad-bharatiya-samaj.html

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதி பர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பு  பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. தவிர படிப்பு முடியும் வரை கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான தொகையையும் அளிக்கிறது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகையைப் பெற முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட்

நன்றாகப் படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் அளவுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகிறது இந்த டிரஸ்ட். இளங்கலை, முதுகலை, கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், நர்சிங், ஆசிரியர் பயிற்சி, பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.jaigopalgarodia.org

கௌரவ் ஃபவுண்டேஷன்

இளங்கலை, முதுகலை, ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் உதவித்தொகையாக வழங்குகிறது இந்த அமைப்பு. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 4 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பள்ளி மாணவர்களும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உதவித் தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: http://gauravfoundation.org/scholarship.html

ஃபவுண்டேஷன் ஃபார் அகாடமிக் எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ்

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்படிப்பு, இளநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. பயணச்செலவு, தங்கும் செலவு, துணிகள், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வாங்கும் செலவுகளும் உதவித்தொகையில் அடங்கும். மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: www.faeaindia.org

Leave a Reply