சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம். போக்குவரத்து ஸ்தம்பித்தது
சென்னை, அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்கத் தூதரகம் மற்றும் சர்ச் பார்க் பள்ளிக்கு அருகே இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் அந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்டினர்.
மெட்ரோ ரயில் பணிகளின் தாக்கத்தால் இந்தப் பள்ளம் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மெட்ரோ பணிகளின்போது ஏற்பட்ட சிமென்ட் கலவை கசிவால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பள்ளம் ஏற்பட்டதன் காரணமாக அண்ணா சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் வேலைக்குச் செல்பவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு மேல் சாலையில் ஸ்தம்பித்து நிற்கின்றனர். போக்குவரத்துப் போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீர்படுத்திவருகின்றனர்.