சென்னை சென்ட்ரல் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம். பெரும் பரபரப்பு

chennaiசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள சாலையில் திடீரென மிகப்பெரிய பள்ளம் உருவானதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி சாலையில் நேற்றிரவு திடீர் பள்ளம் உருவானது. 12 அடி விட்டமும் 7 அடி ஆழமும் இருந்த இந்த தீடீர் பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் சென்னை மாகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மெட்ரோ ரயில் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சிமென்ட் கலவையை அந்த பள்ளத்தில் கொட்டி பள்ளம் உடனடியாக நிரப்பபட்டது. அதன்பின்னரே அந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

இரவு நேரம் என்பதால் போக்குவரத்து குறைவாக இருந்ததாகவும், இந்த பள்ளம் பகலில் ஏற்பட்டிருந்தால் உயிரிழப்பு நேரிந்திருக்கும் என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறினார். இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply