சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

12

சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்தப் பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும். சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை.

எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

• அவசரமாக பார்ட்டிக்கு கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 4 முதல் 5 நிமிடங்கள் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாகவும் பொலிவோடும் காணப்படும்.

• கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும். இதனை வாரம் இருமுறை செய்யலாம்.

• எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை 5 முதல் 7 நிமிடங்கள் ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

• பால் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதில் சிறிது சந்தனப் பொடியை சேர்த்து, சருமத்தில் தடவி மென்மையாக சருமத்தை மசாஸ் செய்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கிவிடுவதோடு, சருமமும் வெள்ளையாக மாறும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

Leave a Reply