ஏமன் நாட்டில் நேற்று நடந்த இரண்டு வெவ்வேறு தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏமன் நாட்டின் தலைநகர் சானா மற்றும் முகல்லா ஆகிய இரண்டு நகரங்களில் நேற்று காலை தற்கொலைப்படையினர் நடத்திய பயங்கர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 50 பேர் வரை கொல்லபட்டனர். இவர்களில் இருபது பேர்களுக்கும் மேல் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர்களின் செக்யூரிட்டி போஸ்ட் அருகே இந்த தற்கொலை தாக்குதல் நடந்துள்ளதால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த தாக்குதலுக்கு எவ்வித தீவிரவாத இயக்குமும் பொறுப்பேற்கவில்லை எனினும் இந்த தாக்குதல் பாணி அல்கொய்தாவின் பாணியில் அமைந்துள்ளதாக ஏமன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1srlTHX” standard=”http://www.youtube.com/v/uVclmZ9qNK4?fs=1″ vars=”ytid=uVclmZ9qNK4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2140″ /]