அமெரிக்காவிலேயே அதிக ஊதியம் பெறும் தமிழர் சுந்தர்பிச்சை
உலகின் நம்பர் ஒன் தேடுதளம் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்காவிலேயே மிக அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாகியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு 230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்மூலம் தமிழரான சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாகியாக மாறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள சென்னையில் பிறந்தவரான 43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபர் மாதம் கூகிள் நிறுவனம் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். கூகுள் நிறுவனம் இவருடைய தலைமைக்கு வந்த பின்னர் பலவித மாற்றங்கள் நடைபெற்று வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் கூகுள் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.
தற்போது சுந்தர் பிச்சையிடம் சுமார் 650 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கூகுள் நிறுவன பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரின் சொத்து மதிப்பைவிட இது மிகவும் குறைவு. அவர்கள் ஒவ்வொருவரும் தலா சுமார் 34 பில்லியன் டாலர்கள் சொத்து இருப்பதாக கருதப்படுகிறது
Chennai Today News: Sultan of moolah: Google’s Sundar Pichai highest paid CEO in US