• புடலங்காய் கோடையில் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுத்து, உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கும். மேலும் கோடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்க உதவுகிறது. விலை குறைவாக புடலங்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்
• மஞ்சள் பூசணி கோடையில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றில் புழுக்கள் சேராமல் தடுக்கும்.
• சுரைக்காயில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால், இதனை கோடையில் வாங்கி அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும் சுரைக்காய் வயிற்று பிரச்சனைகளாக அல்சர் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைத் தடுக்கும்.
• வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் 2 முறை சாம்பார் செய்து சாப்பிட்டால், உடல் வறட்சியடையாமல் இருக்கும். மேலும் வெள்ளை பூசணியில் உள்ள நீர்ச்சத்தால், உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு, சிறுநீரக கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
• ஏழைகளின் வள்ளல் வெள்ளரிக்காய். கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்லாமல், வெள்ளரிக்காய் மிகவும் விலைக் குறைவில் கிடைப்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டால், எண்ணற்ற நன்மையைப் பெறலாம்.
• தர்பூசணி பழம் கோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கிறது. தர்பூசணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. மேலும் உடலுக்கு குளுமையை தருகிறது. – கோடை காலத்தில் இந்த காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொண்டால் உடலின் நீர்சத்தை பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.