டிசம்பர் 19ஆம் தேதி நேரில் ஆஜராக சிம்பு-அனிருத்துக்கு கோவை போலீஸ் உத்தரவு
அனிருத் இசையில் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாடல் ஆபாசமான வார்த்தைகள் மட்டுமின்றி பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாலும் மாநிலம் முழுவதும் பெண்கள் அமைப்பிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் கோவையில் உள்ள பெண் அமைப்பு ஒன்று காவல்நிலையத்தில் புகார் அளித்தது.
இந்த புகாரின் அடிப்படையின் சிம்பு மற்றும் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடலை தான் இசையமைக்கவில்லை என்றும் இந்த பாடலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அனிருத் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பாடல் தனது தனிப்பட்ட பாடல் என்றும் தனது மொபைலில் இருந்து யாரோ திருடி இணையத்தில் லீக் செய்துவிட்டதாகவும், இதற்கு தான் பொறுப்பாக முடியாது என்றும் சிம்பு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டாதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு மற்றும் அனிருத் ஆகிய இருவரும் வரும் 19ஆம் தேதி கோவை காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோவை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary: Police team from Coimbatore today served summons to STR and Anirudh to appear before Coimbatore Commissioner on 19 December