சன்பிளவர், பாமாயில் லிட்டருக்கு ரூ.50 உயர்வு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பெரும் அளவு சன் பிளவர் ஆயில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதால் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வரவில்லை என்றால் இன்னும் ஓரிரு நாளில் மேலும் உயரும் என கூறப்படுகிறது.

விருதுநகர் மார்க்கெட்டில் இன்றைய எண்ணெய் விலை நிலவரம் இதோ

கடந்த வாரம் நல்லெண்ணெய் கிலோ ரூ 230. இந்த வாரம் ரூ 50 உயர்ந்து ரூ 280க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் கடலை எண்ணெய் கிலோ ரூ 150. இந்த வாரம் ரூ 20 உயர்ந்து ரூ170க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் பாமாயில் எண்ணெய் விலை ரூ125. இந்த ரூ 50 விலை உயர்ந்து ரூ175க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் சன் பிளவர் ரூ 135. இந்த வாரம் ரூ. 50 உயர்ந்து ரூ 185க்கு விற்கப்படுகிறது.

போர் முடிவுக்கு வராவிட்டால் இன்னும் அனைத்து எண்ணெய் விலையும் இன்னும் உயரும் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது