கின்னஸ் சாதனை செய்த உலகின் மிக உயர்ந்த தம்பதிகள்
சீனாவில் உள்ள மக்கள் பொதுவாக உயரம் குறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த நாட்டில்தான் உலகின் மிக உயரமான தம்பதிகள் இருப்பதாக கின்னஸ் சாதனை நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சீனத்தலைநகர் பீஜிங் நகரை சேர்ந்த சன் மிங் மற்றும் சூ யான் என்ற தம்பதியினர்கள் தான் உலகின் மிக உயர்ந்த தம்பதிகள் என கின்னஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருடைய உயரத்தையும் கூட்டினால் 4.2 மீட்டர் வருகிறது. அதாவது 13 அடி மற்றும் 10.72 இன்ச்சுக்கள் இருப்பதாக கின்னஸ் அறிவித்துள்ளது.
சன் மிங் அவர்கள் 7 அடியும் 8.9 இன்ச் உயரமும், அவருடைய மனைவி சூ யான் 6 அடியும் 1.7 இன்ச் உயரமும் இருப்பதாக நிரூபணம் ஆகியுள்ளது.
இருவருமே விளையாட்டு வீரர்கள் என்பதும் இதில் சன் மிங் அவர்கள் பேஸ்கட் பால் விளையாட்டு வீரராகவும், சூ யான் கைப்பந்து விளையாட்டு வீராங்கனையாகவும் உள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்றபோது இருவரும் முதன்முதலில் சந்தித்தனர். அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.