‘தளபதி 62’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

‘தளபதி 62’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

இளையதளபதி விஜய் நடித்து வரும் 61வது படமான ‘தளபதி 61’ திரைப்படம் அட்லியின் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அவருடைய அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய்-முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக அரசியல் சூழ்நிலை காரணமாக தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்திருந்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது மீண்டும் தயாரிப்பை தொடரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கு முன்னர் விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உண்மையெனில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் முதல் விஜய் படம் இதுவாகத்தான் இருக்கும்

Leave a Reply