சன் டிவி சீரியல் நடிகை சென்னையில் தற்கொலை. காதல் தோல்வியா?

சன் டிவி சீரியல் நடிகை சென்னையில் தற்கொலை. காதல் தோல்வியா?

sabarna2பிரபல தொலைக்காட்சி நடிகையும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சொந்தபந்தம்’ என்ற டிவி சீரியலில் வில்லியாக நடித்து வருபவருமான நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டார். சபர்ணாவின் தற்கொலை ‘சொந்தபந்தம்’ டிவி சீரியல் குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவையை சேர்ந்த சபர்ணா, நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்து மதுரவாயல் அருகே உள்ள பிளாட்டில் தங்கியிருந்தார். டிவி சீரியல், சினிமா சான்ஸ், வர்ணனையாளர் என பிசியாக இருந்த சபர்ணா, ஒரு கட்டத்தில் காதலில் விழுந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்த்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சபர்ணாவின் வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டி இருந்ததாகவும், அந்த வீட்டில் இருந்து துர்வாடை வந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து திறந்த பார்த்தபோது சபர்ணா தற்கொலை செய்து கொண்டதை அறிந்து கொள்ள முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சபர்ணாவின் உடல் கிடந்த இடத்தில் இருந்து மதுபானங்கள், சிகரெட் போன்றவை மீட்கப்பட்டதாகவும், இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply