சுனந்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவே இல்லை. எய்ம்ஸ் மருத்துவரின் திடுக்கிடும் தகவல்

8முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி சுனந்தாவின் மரணத்தில் மரணம் இருப்பதாகவும், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருத்தம் செய்ய தான் நெருக்கடியை சந்தித்ததாகவும் , டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் குப்தா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது என பிரேத பரிசோதனை அறிக்கை தருமாறு தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது என்றும் உண்மையில் சுனந்தாவின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவே இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டரின் பேட்டியை தொடர்ந்து சுனந்தாவின் மரணத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய விளக்கம் கேட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தர். அவரது கன்னத்தில் காயம் இருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்த போதிலும், பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அதிகளவு மருந்துகள் உட்கொண்டதால்தான் அவர் மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரை கொலை செய்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று காவல்துறை கூறி வழக்கை முடித்துவிட்டது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவரின் திடுக்கிடும் பேட்டி வெளிவந்துள்ளதால், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர்கள் அமித் குப்தா, நீரஜா ஆகியோர் கூறியதாவது: “சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுக்கிறது. அவரது புகாருக்கான ஆதாரம் இருந்தால், அதை அவர் கொண்டுவர வேண்டும்’ என்று எய்ம்ஸ் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply