சுனந்தா பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்பில் இருப்பது என்ன?

sunandaமுன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணத்தின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை தடவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சுனந்தா கொலை வழக்கில் அவரது கணவர் சசிதரூர் உள்பட பலரது விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சுனந்தாவின் நான்கு செல்பொன்கள், லேப்டாப் மற்றும் அவர் பயன்படுத்திய எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை குஜராத்தில் உள்ள தடவியல் அறிவியல் இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் முக்கிய தடயங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் இன்று பேட்டி கொடுத்த தடய அறிவியல் இயக்குநரகத்தின் இயக்குநர் ஜே.எம்.வியாஸ் கூறும்போது, “இந்த விஷயத்தில் எங்களுக்கு எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. எங்களிடம் உள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு சுனந்தா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போன்களை ஆராய உள்ளோம்.

அதன் மூலம் அவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டிருந்தார், என்ன மாதிரியான தகவல்களை அவர் பரிமாறிக் கொண்டார் என்பது குறித்து தெரிய வரும். அவை போலீஸாருக்குப் பயன்படலாம்” என்றார்.

Leave a Reply