சுனந்தா வழக்கில் சசிதரூரை சிக்கவைக்க சதியா? பெரும் பரபரப்பு

sunandaஎனது மனைவி சுனந்தா மரணத்தில் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் கூறியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற  ஓட்டலில், சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை செய்து வந்த டெல்லி போலீஸார் அவர் விஷம் அருந்தியதால் மரணம் அடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கையின் மூலம் சமீபத்தில் உறுதி செய்தனர்.  

இதனால் சுனந்தா வழக்கை நேற்றூ டெல்லி காவல்துறையினர், கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். சுனந்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடிக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீஸாரின் இந்த அறிவிப்பை அடுத்து இன்று காலை சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ”சுனந்தா மரணத்தில் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது. நானும், எனது பணியாளரும் சேர்ந்து சுனந்தாவை கொலை செய்து விட்டதாக கூறுமாறு, எனது பணியாளருக்கு போலீசார் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனது பணியாளரை போலீசார் விசாரித்தபோது அவரை கடுமையாக தாக்கி இதை ஒப்புக்கொள்ள சொல்லி உள்ளனர். இது குறித்து நான் கடந்த நவம்பர் மாதமே டெல்லி காவல்துறை கமிஷனர் பி.எஸ்.பாஸ்சிக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று கூறினார்.

சுனந்தாவின் கொலை வழக்கில் விரைவில் திடுக்கிடும் திருப்பங்களும் கைது நடவடிக்கைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply