உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், சித்திரை பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உத்திர÷ மரூரில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்÷ மற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா, நேற்று துவங்கியது. காலை 6:30 மணிக்கு, கொடியேற்றத்தை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், காலை 9:00 மணிக்கு, வீதியுலா புறப்பட்டு, உத்திரமேரூர் பேருந்து நிலையம் அரு கே உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பஜார் வீதி வழியாக வலம் வந்த சுவாமியை, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வீதியுலா முடிந்த காலை 11:30 மணிக்கு ஆலயத்திற்கு வந்தடைந்தார்.