இந்திய அணி தோல்வி குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து

இந்திய அணி தோல்வி குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து
gavaskar
நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 309 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் சுழற்பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ‘ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித்தை விரைவில் வீழ்த்த இந்திய அணி வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டீவன் சுமித் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார். 2014-2015-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் சுமித் 162*, 52*, 133, 28, 192, 14, 117, 71 ரன்கள் குவித்து அந்த அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 105 ரன்கள் குவித்தார். சுமித்தை விரைவில் வீழ்த்தாவிட்டால் இந்தியா வெற்றி பெறுவது இயலாத காரியம் என்று கூறும் அளவிற்கு அவரது ஆட்டம் சிறப்பாக உள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சுனில் கவாஸ்கர் “ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித்தை குறைந்த ரன்களில் வீழ்த்த இந்திய அணி வழி கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கு பந்து வீச இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள். மேலும் சுமித்துக்கு எப்படி பந்து வீசுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply