8வது ஐ.பி.எல் போட்டியின் 27வது போட்டி நேற்று மொகாலியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் ஐதராபாத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான தவான் இரண்டாவது ஓவரிலேயே ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான வார்னர் அபார விளையாடி 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் துணையுடன் 58 ரன்கள் குவித்தார். இதனால் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மூன்று விக்கெட்டுக்களை ஐதராபாத் அணியில் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.,