சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா, விஜய் டிவியில் இருந்து விலகினார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பாவனா, விஜய் டிவியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை வெகு சிறப்பாகவும், அழகாகவும் தொகுத்து அளித்த ஆறடி உயர தொகுப்பாளினி பாவனா, குடும்ப சூழல் காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

பாவனாவின் கணவர் நிகில் ஒரு என்ஜினீயர். இதுவரை சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்த அவருக்கு தற்போது மும்பையில் டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது. பாவனாவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்துவிட்டபடியால், அவர் விஜய் டிவியில் இருந்து கணவருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். அடுத்த சூப்பர் சிங்கரில் வேலை செய்வது குறித்து எந்தவொரு ஐடியாவின் இல்லை என்று கூறிய பாவனா, மும்பையில் உள்ள சேனல்களில் வேலை தேடுகிறார்.

Leave a Reply