ஏழை எளியவர்களுக்கு உயர்ந்த தரமான மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்ற முதல்வரின் நோக்கம் தற்போது நிறைவேறும் நாள் வந்துவிட்டது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வந்த நவீன மருத்துவமனையின் பணி முழுவதும் முடிவடைந்துவிட்டது. இந்த மருத்துவமனையை முதலமைச்சர் ஜெயலலிதா வரும் 21ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்று அழைக்கப்படும்.
முற்றிலும் ஏ.சி. செய்யப்பட்டுள்ள இந்த சூப்பர் ஸ்பெஷாலட்டி மருத்துவமனையை நவீனப்படுத்த ரூ.634 கோடி பொதுப்பணி துறைக்கு ஒதுக்கப்பட்டது. தரை தளம் உள்பட 6 தளங்களில் வார்டுகள், ஆபரேஷன் தியேட்டர், நிர்வாக அலுவலகம், ‘ஆய்வுக்கூடம்’ போன்றவை மருத்துவமனைக்கு ஏற்ப முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டது.
நீரோ, நீரோ சர்ஜரி, இருதய நோய் மற்றும் இருதய அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை. புற்றுநோய்க்கு 3 சிறப்பு பிரிவின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும். மருந்து மூலம் சிகிச்சை பெறக்கூடிய புற்று நோயாளிகள், அறுவை சிகிச்சை புற்று நோயாளிகள், கதிர்வீச்சு போன்ற பிற மருத்துவமனைகளில் இல்லாத வசதி இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ளது