கொரோனா குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் டுவீட்
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. அரசோடு சேர்ந்து மக்களும் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்’ என்று கூறியுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) March 19, 2020