சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே கடந்த 2000ஆம் ஆண்டு பத்மபூஷன் வாங்கிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ரஜினிக்கு பத்மபூஷன் விருது வழங்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் யோகா மாஸ்டர் ராம்தேவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், உள்ளிட்ட 148 பேர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு துறைகளில் நாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு 148 பேருக்கு பத்ம விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்ம விருதுகள் பெறவுள்ள முக்கிய நபர்களின் விபரங்கள்:
அரசியல் துறை”
எல்.கே.அத்வானி
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்
யோகா மாஸ்டர் ராம்தேவ்
திரைப்படத்துறை:
நடிகர்கள் திலிப்குமார்
அமிதாப் பச்சன்
ரஜினிகாந்த்
திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
விளையாட்டுத் துறை
ஹாக்கி அணியின் கேப்டன் சர்தாரா சிங்
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
செஸ் கிராண்ட் மாஸ்டர் கிருஷ்ணன் சசிகிரண்
மல்யுத்த வீரர் சுஷில்குமார்
பொது:
இஸ்ரோ விஞ்ஞானிகள் அருணன்
ஷிவ்குமார்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஆகியோர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.