சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மலேசிய கவர்னர் வரவேற்பு.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கபாலி படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து மலேசியாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்காக நேற்று இரவு ரஜினிகாந்த் மலேசியா சென்றார். அவருக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மலேசியாவில் உள்ள மெலேகா என்ற மாகாணத்தின் கவர்னரை மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தார்.
அவரை வாழ்த்திய மலேசிய கவர்னர், தங்கள் நாட்டிற்கு படப்பிடிப்பு நடத்த வந்த ரஜினிகாந்த் மற்றும் ‘கபாலி’ படக்குழுவினர்களை தான் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளும், ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் இருந்தனர். நாளை முதல் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
English Summary: Super Star Rajinikanth meet Melaka state governor