ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

jaya and rajiniதமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, சம்பத், வேலுமணி, சின்னாயா ஆகியோர் ஓட்டு மொத்தமாக பதவியேற்றுக் கொண்டனர். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ரமணா, வீரமணி, தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜய பாஸ்கர் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவையில் பெரும்பாலும், முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டு, முன்பு அவர்கள் வசமிருந்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விழாவிற்காக சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பல முக்கிய வி.ஐ.பிக்கள் நேரில் வந்திருந்தனர். திரைத்துறையில் பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply