பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய சட்டக்கல்லூரி மாணவிக்கு முதல்வர் பாராட்டு
கேரளாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரி ஒருவரின் ஆணுறுப்பை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு முதல்வர் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர்.
கேரளாவில் கணேஷானந்தா என்ற சாமியார் பல வருடங்களாக ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதால் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். பணத்திற்கு ஆசைப்பட்ட அந்த பெண் தன்னோடு உறவு வைத்து கொள்ள அனுமதித்ததோடு இல்லாமல், ஒரு கட்டத்தில் தனது மகளையும் சாமியாருக்கு அர்ப்பணித்துள்ளார்.
18 வயதில் இருந்தே சாமியாரின் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான அந்த இளம்பெண், தற்போது சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சாமியாரின் பாலியல் தொல்லை எல்லைமீறி போவதை கண்டு ஆத்திரம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவி இதற்கு முடிவு காண, நேற்று சாமியார் தன்னுடன் உறவு கொள்ள வந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டினார்/
90% வெட்டுப்பட்ட ஆணுறுப்போடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாமியாரின் ஆணுறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிட்டனர்.
சட்டத்தை கையில் எடுத்து தைரியமாக செயல்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.