7 பேர் விடுதலை. உச்சநீதிமன்றம் திடீர் தடை.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று மாலை திடீர் தடை விதித்துள்ளது.

7பேர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பது குறித்து மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மோகன் பராசரன்  விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவில், வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில் மாநில அரசு விடுவிக்க முடியுமா? என்று கேள்வி கேட்ட மனுதாக்கல் செய்தது.

மத்திய அரசு வழக்கறிஞரின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 7 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை  என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை வருகிற மார்ச் மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த உத்தரவால் மூன்று நாட்களில் 7பேர்களும் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

Leave a Reply