சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை. ராஜ்யசபாவில் திருச்சி சிவா கோரிக்கை
சென்னை ஐகோர்ட் கிளை மதுரையில் செயல்படுவது போன்று சுப்ரீம் கோர்ட்டின் கிளை தென்னிந்திய மக்களின் நன்மைக்காக சென்னையில் அமைக்க வேண்டும் என்று திருச்சி சிவா கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து நேற்று ராஜ்யசபாவில் திருச்சி சிவா பேசியதாவது: தென் மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட் வழக்குகளுக்காக புதுடெல்லி வரை வந்து செல்ல வேண்டிய அலைக்கழிப்புகள் அதிகமாக உள்ளன. இதனை தவிர்க்க வேண்டியது அவசியம். இதற்காக, சுப்ரீம் கோர்ட்டின் ஒரு தனி பெஞ்ச்சை சென்னைய்யில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால், நீதிமன்றங்களின் பணிகள் ஸ்தம்பித்து உள்ளன. மத்திய அரசாங்கமோ ‘இது நீதிமன்றங்கள் சார்ந்த விவகாரம்’ என ஒதுங்கிக் கொள்கிறது. இது சரியல்ல. இதில் மத்திய அரசு ஒரு முடிவு எடுத்து பொதுமக்களின் அவலங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.