வெடிகுண்டு வைத்து மக்களை கொன்று விடுங்கள்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்
டெல்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு பேசாமல் வெடிகுண்டுகள் போட்டு ஒரேயடியாக மக்களை கொன்றுவிடலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்ந்து வருவதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசால் டெல்லி, என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்
காற்று மாசை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக கண்டனம் கூறிய நீதிமன்றம், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என வேதனையுடன் குறிப்பிட்டனர்.
மத்திய அரசும், டெல்லி அரசும் தங்களிடையேயான வேறுபாடுகளை மறந்து 10 நாள்களில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் திட்டத்தை தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.