அன்புமனு மீதான முறைகேடு புகார். சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

அன்புமனு மீதான முறைகேடு புகார். சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
anbumani
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்றபோது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பா.ம.க தலைவரின் மகன் அன்புமணி இருந்து வந்தார். இந்த காலகட்டத்தில் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் மாணவர்கள் சேர்க்க விதிகளை மீறி அன்புமணி ராமதாஸ் செயல்பட்டதாகவும் அவர் மீது சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

ஆனால் இதற்கு அன்புமணி தனது மறுப்பை தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக இட்டுகட்டப்பட்டதாகவும், சி.பி.ஐ மூலம் இந்த வழக்குகளை தனது அரசியல் எதிரிகள் தொடுத்ததாகவும் அவர் தனது வாதத்தில் கூறியுள்ளார். மேலும் இது பொய்வழக்கு என்பதால் தன்மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்று அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், கோபால கவுடா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் இந்த வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மனுதாரர் விசாரணை நடைபெறும் நீதிமன்றத்திலேயே மனு செய்து கெள்ள கூறி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply