ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரணை செய்த அமர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து கூறியுள்ளார்.
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செல்லமேஸ்வர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, இளைய நீதிபதிகளை கொண்ட அமர்வு. இதற்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அந்த அமர்வே விசாரித்தது. ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டுக்கு பிறகே அந்த அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு என்ன பயன் தரும்?
விசாரணைக்காக வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்குவது குறித்த அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருப்பதால், அவர் அந்த அதிகாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் வழக்குகள் ஒதுக்கப்பட்டால், அது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை பாதிப்பதாக அமைந்து விடும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து தெரிவித்தார்