கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் அதிரடி தீர்ப்பு

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் அதிரடி தீர்ப்பு

கர்நாடகா மாநிலத்தில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமியின் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா தனிப்பட்ட முடிவு இல்லை என்று கூறி இவர்கள் அனைவரையும் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார்.

இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply