உள்ளாட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பு: அரசியல் கட்சிகள் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசின் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து வாதங்களையும் கேட்ட பின்னர், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முயற்சி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவிப்பு அக்கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருப்பதாக கூறப்படுகிறது
1991 கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில் திமுக தரப்பு கோரிக்கையை ஏற்று 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புபடியே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது