ஜெயலலிதா உள்பட 4 பேர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட நான்குபேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த அமர்வு நீதிபதிகள் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு நிறுவனங்களுக்கும்ம் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகிய இரு மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு இன்று விசாரணை நடந்தது.

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் நீக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவையும் தி.மு.க தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மூன்று வாரத்தில் பதில் அளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஜெயலலிதா உள்பட 4 பேரும் பதில் மனுத் தாக்கல் செய்த பின்னர் 3 வாரத்தில் கர்நாடக அரசு மற்றும் திமுக தரப்பினர் பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்க கோரி பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.


Leave a Reply