மே 1 மற்றும் ஜூலை 24 என இரண்டு கட்டங்களாக மருத்துவ நுழைவுத்தேர்வு. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மே 1 மற்றும் ஜூலை 24 என இரண்டு கட்டங்களாக மருத்துவ நுழைவுத்தேர்வு. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

studentsமருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நுழைவுத் தேர்வு தொடர்பான அட்டவணையையும் சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது. அதன்படி, மே 1 முதல்கட்ட தேர்வையும், ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்வையும் நடத்த வேண்டும் என்றும் ஆகஸ்ட் 17-ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 1ஆம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் முதல்கட்ட தேர்வை எப்படி மாணவர்கள் எழுதப்போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply