ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் பிரச்சனை. சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒரு பிரிட்டன் குடிமகன் என்றும், இந்திய அரசியல் சாசன விதிப்படி ஒருவர் இரட்டைக் குடியுரிமை வைத்துக் கொள்ள முடியாது என்றும் இதனால் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த வழக்கு ஒன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காக எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, “ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்சினை தொடர்பான விசாரணைக்கு அவசரம் காட்ட வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்தனர்.