கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையம் முறையாக பின்பற்றவில்லை என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கூடங்குளம் அணு உலையில் தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் வாதத்தை மறுத்து பேசிய மத்திய அரசு வழக்கறிஞர் மோகன் பராசுரன், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சரியாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தீர்ப்பில் பாதுகாப்பு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்ய தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் உலைகளிலும் வெளியாகும் அணு உலைக்கழிவுகளை சேமித்து வைக்க நிரந்தர இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.