தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டில் தமிழக விவசாயிகள் வறட்சியால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டு வர விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரித்த சென்னை ஐகோர்ட் 5 ஏக்கருக்குக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை ஐகோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளதோடு 5ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கோரியது குறித்து அய்யாக்கண்ணுவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Leave a Reply