அயோத்தி வழக்கின் சீராய்வு மனு: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் திடீர் திருப்பம்
அயோத்தி வழக்கின் தீர்ப்பை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் 5 பேர் கொண்ட நீதிபதி குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த சீராய்வு மனுக்களால் அயோத்தி வழக்கில் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்பது குறிப்ப்பிடத்தக்கது
சீராய்வு மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டதால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது 100% உறுதி ஆயிற்று என்பதால் இந்து அமைப்புகள் ராமர் கோவிலை கட்டுவதற்கு உண்டான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.