பதவி உயர்வில் இட ஒதுக்கீடு. நீதிமன்றம் தலையிட முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

supreme courtமத்திய அரசு வங்கியான “சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’வின் நிர்வாகம், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற போவதில்லை என வங்கிநிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து, நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் “சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியின் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு கூறியுள்ள உச்சநீதிமன்றம் ‘பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க விதிகளை உருவாக்கும்படி, மாநிலங்களுக்கு நீதிமன்றங்களால் உத்தரவிட முடியாது” என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் செலமேஸ்வர், ஏ.கே. சிக்ரி ஆகிய  நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:

அரசமைப்புச் சட்டத்தின் 16ஆவது பிரிவில் உள்ள 4, 4 ஏ ஆகிய உட்பிரிவுகளில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செய்து தருவது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த விதிகளை கட்டாயமாக உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றங்கள் கட்டளையிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகள்தான் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

எனினும், நியாயமாக தங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்று, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கருதினால், அவர்கள் நீதிமன்றங்களை நாடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Leave a Reply