அஜித்பவார் காலில் விழுந்த சரத்பவாரின் மகள்
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென பாஜக கூட்டணிக்கு சென்ற அஜித்பவார், மீண்டும் சொந்த கட்சிக்கு நேற்று வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் சொந்த கட்சிக்கு வந்த அஜீத்பவாரை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே காலில் விழுந்து வரவேற்றார்
இன்று காலை சட்டப்பேரவைக்கு பதவியேற்பதற்காக வந்திருந்த அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே காலில் விழுந்து வரவேற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
மூத்த சகோதரரான அஜித் பவார் கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து விலகி துணை முதலமைச்சராக பதவியேற்றதால் கட்சி மட்டுமின்றி குடும்பமே நிலை குலைந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கள் அணிக்கே அஜித் பவார் திரும்பி வந்ததால் உணர்ச்சி பெருக்கால் அவரை சுப்ரியா காலில் விழுந்து வரவேற்றார். தற்போது குடும்பமும் கட்சியும் இணைந்துள்ளதற்கு சுப்ரியாவுக்கு இரட்டை சந்தோஷம்