ரஜினி ஒருவருக்குத்தான் சூப்பர் ஸ்டார் பட்டம் பொருந்தும். சூர்யா

super starஅஞ்சான் ஹீரோ சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த்தை தவிர வேறு யாரையும் சூப்பர் ஸ்டாராக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற வாதம் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்டு வரும் நிலையில் சூர்யவின் கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டபோது, ‘தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மீது எவ்வித ஈர்ப்பும் இல்லை என்றும், அந்த பட்டத்தை பெறும் அளவுக்கு நான் இன்னும் என்னுடைய தகுதியை வளர்த்துக்கொள்ள வில்லை என்றும் கூறினார்.

மேலும் தன்னை பொறுத்த வரையில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவர்தான். அவரை தவிர வேறு யாரையும் சூப்பர் ஸ்டார் பட்டத்தினை தொடர்பு படுத்தி நினைத்து பார்க்கவே முடியவில்லை என்று கூறினார்.

மேலும் அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் வெவ்வேறு கோணங்களில் பயணமாகி 50 படங்களை தாண்டி வெற்றிகரமாக தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களுடன் போட்டி போட என்னால் முடியாது. என்னுடைய டிராக் தனியானது என்று கூறியுள்ளார்.

Leave a Reply