சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த வாரம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘அஞ்சான்’ நெகட்டிவ் ரிசல்ட் ஆனதால் வெங்கட்பிரபு தற்போது சூர்யாவை வைத்து எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் கதையை திடீரென மாற்றியுள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த மாதம் சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்” படத்திற்கு பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் நயன் தாரா, எமி ஜாக்சன், பிரேம்ஜி அமரான் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை முதலில் ‘மங்காத்தா’ கதை போன்று விறுவிறுப்பான ஆக்சன் மற்றும் த்ரில்லம் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சூர்யாவின் ஆக்சன் படமான அஞ்சான் படுதோல்வி அடைந்த்தால், சூர்யாவின் ஆலோசனைப்படி இந்த படத்தின் கதை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த படத்தின் கதை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் தமிழில் ஆக்சன் கதைகளுக்க் விஜய் மற்றும் அஜீத் மட்டுமே பொருத்தமாக இருப்பார்கள் என்றும் சூர்யா ஆக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என வெங்கட் பிரபுவிடம் சிலர் ஆலோசனை கூறியதன் பேரில் இந்த படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.