பிரபலமாக விளங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் எல்.கே.ஜி வகுப்புகளுக்கு ஜனவரி மாதமே விண்ணப்பங்கள் கொடுப்பதாக வந்த புகார்களை அடுத்து இன்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் பிச்சை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னர்தான் அட்மிஷன் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டும். சில பள்ளிகளில் ஜனவரி மாதமே கொடுப்பதாக புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையை மீறி ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விண்ணப்பங்கள் கொடுக்கும் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிச்சை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெட்ப்பர்ட் பள்ளியில் எல்.கே.ஜி சேர்க்கைக்கு விண்ணப்பம் நேற்று கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து ஏராளமான பெற்றோர்கள் வரிசையில் நின்றிருந்தனர். ஒருசிலர் முதல் நாள் இரவு முதலே நிற்பதாக புகார்கள் வந்துள்ளதை அடுத்த அந்த பள்ளிக்கு ஆய்வாளர் ஒருவரை அனுப்பி விசாரணை செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.