விருதுகளை திருப்பி ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. அருண்ஜெட்லி

விருதுகளை திருப்பி ஒப்படைப்பதில் எந்த நியாயமும் இல்லை. அருண்ஜெட்லி
arun jaitley
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை வலியுறுத்தி திரையுலகை சேர்ந்த பலர் தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், திரையுலகினர் விருதுகளை திரும்ப ஒப்படைப்பதில் எந்த அர்த்தமும் நியாயமும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

திரையுலகினர்களும், எழுத்தாளர்களும் தங்களுடைய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருவது குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ”நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவதும் தவறானது. சகிப்புத்தன்மை இல்லாத நிலையை நாம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அறிவுஜீவிகள்தான் நாட்டில் இல்லாத ஒன்றைப் பற்றி பேசுகின்றனர். தற்போது நாடு முழுவதும் அமைதியும், நல்லிணக்கமும் நிலவுகிறது.

தவிர, முன்பு நாடு சகிப்புத்தன்மை பாதையில் இருந்து விலகிச் சென்றதுபோன்ற சம்பவங்கள் எதுவும் தற்போது நடைபெறவில்லை. அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தினரும், ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

இந்தி திரையுலகினர் தங்களுக்கு கிடைத்த விருதுகளை திரும்ப ஒப்படைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகள் திரையுலக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடைய வெற்றிக்கான அங்கீகாரமாக வழங்கப்பட்டவை. அதனால், விருதுகளை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்து இருப்பதில் எந்த நியாயமும் கிடையாது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply