கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா? சர்வேயால் பாஜக அதிர்ச்சி

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா? சர்வேயால் பாஜக அதிர்ச்சி

கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று வீரநடை போட்டு வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரே பெரிய மாநிலமான கர்நாடகாவையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறது

அதேபோல் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இப்போதே களத்தில் இறங்கிவிட்டார். இந்த நிலையில் சி-ஃபோர் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் காங்கிரஸ் கட்சிக்கு 46% வாக்குகளும், பாஜகவுக்கு 31% வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வெறும் 16 சதவீத வாக்குகளை பெறும் கூறப்பட்டுள்ளது.

இந்த சதவிகித அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் 126 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்பது தெரியவருகிறது. ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் இறங்கினால் இந்த சதவிகிதம் மாறவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply