கங்கையில் எத்தனை டால்பின்கள் உள்ளன. கணக்கெடுக்க மத்திய நீர்வளத்துறை உத்தரவு.

dolphinஇந்தியாவின் புனித நதியான கங்கை ஆற்றில் மொத்தம் எத்தனை டால்பின்கள் உள்ளன என்பது குறித்த கணக்கெடுப்பை முதன் முறையாக நடத்த மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் தொடங்கும் இந்த கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின்  கடல்வாழ் உயிரினங்களில் தேசிய விலங்கு டால்பின் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் டால்பின் குறித்து ஆய்வு செய்வதற்காக பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் தேசிய டால்பின் ஆய்வு மையம் வரும் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

இந்த ஆய்வு மையம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் உள்ள டால்பின்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தும் என்றும் முதல்கட்டமாக கங்கையில் உள்ள டால்பின்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தும் என்றும் கங்கையை சுத்தப்படுத்தும் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இத்துறையின் அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடும் ஆற்றில் மூன்று வகை டால்பின்கள் பற்றிய கணக்கெடுப்பை இதுவரை பல்வேறு தனியார் அமைப்புகள் நடத்தி யுள்ளன. அதன்படி, அமேசான் ஆற்றில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாகவும், சிந்துவில் சுமார் 1600 மற்றும் கங்கையில் 3000 முதல் 3100 வரையும் டால்பின்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply