பாராளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளை பல முன்னணி பத்திரிகைகள் நடத்தி வருகின்றன. இதில் ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு விதமாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளதால் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
சமீபத்தில் என்.டி.டி.வி எடுத்த சர்வேயில் அதிமுக 22, திமுக 14, பாஜக 3 தொகுதிகளை கைப்பற்றும் என கூறியுள்ளது. ஆனால் தமிழின் முன்னணி பத்திரிகையான ஜூனியர் விகடன் நேற்று வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா தமிழகத்தில் அதிக இடங்களை வெல்லும் என்றும் அதற்கு அடுத்தால்போல் அதிமுக, மற்றும் திமுக அணிகள் உள்ளதாகவும் கூறுகிறது. பாரதிய ஜனதாவுக்கு 50% ஓட்டுக்களும், அதிமுகவுக்கு 25% வாக்குகளும், திமுகவுக்கு 17 சதவிகித வாக்குகளூம், காங்கிரஸுக்கு 9 சதவிகித வாகுகளும் கிடைக்கும் என கூறியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி பாஜக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் அதிக இடங்களை கைப்பற்றும் என ஜூனியர் விகடன் கூறியுள்ளது.
ஆனால் இன்று நக்கீரன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. 15 தொகுதிகளின் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ள நக்கீரன் திமுக 10 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும், பாரதியஜனதா ஒரு தொகுதியிலும், ஒரு தொகுதி திமுக அதிமுக இடையே இழுபறியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த மாறுபட்ட கருத்துக்கணிப்புகளால் மக்கள் பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.