‘தானா சேர்ந்த கூட்டம்’. இதுதான் சூர்யாவின் அடுத்த பட தலைப்பு
ஹரி இயக்கி வரும் சிங்கம் 3′ படத்தை அடுத்து சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நானும் ரெளடிதான் ‘போலவே இந்த டைட்டிலும் ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் உள்ளது என்பதும் மேலும் இந்த டைட்டில் ரஜினி ‘பாட்ஷா’ படத்தில் பேசிய வசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்.